செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மணி மண்டபங்களில் நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

 

நூலகர் மற்றும் காப்பாளர் 

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Certificate In Library and Information Science (C.L.I.S) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

விண்ணப்பதாரர்கள் 01.07.2024 அன்று 18 வயது முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி பிரிவினர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : 7700-24200

தேர்வு செய்யப்படும் முறை :

 இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://thoothukudi.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், தூத்துக்குடி - 628101

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.10.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://thoothukudi.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.