பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் வேலை வாய்ப்பு

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் (Bank of Maharashtra) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 600 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


Apprentice

காலியிடங்களின் எண்ணிக்கை : 600

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

இப்பணியிடங்களுக்கு 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

ஊக்கத்தொகை : ரூ. 9,000

தேர்வு செய்யப்படும் முறை :

 இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://bankofmaharashtra.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.10.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://bankofmaharashtra.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.