பிளஸ்-2, பிளஸ்-1, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெயிட்டார் கல்வி அமைச்சர்

தமிழகத்தில் இந்த கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.


அதன்படி, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல், 11 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி 21- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

2024 - 2025ம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை

  • 03.03.2025 - திங்கள்கிழமை - தமிழ் மற்றும் இதர மொழிப்படாங்கள்
  • 06.03.2025 - வியாழக்கிழமை - ஆங்கிலம்
  • 11.03.2025 - செவ்வாய்க்கிழமை - கணிதம், விலங்கியல், வர்த்தகம், மைக்ரோ உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல்ஸ் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது)
  • 14.03.2025 - வெள்ளிக்கிழமை - கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழில்முறை), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
  • 18.03.2025 - செவ்வாய்க்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்
  • 21.03.2025 - வெள்ளிக்கிழமை  - வேதியியல், கணக்கு, புவியியல்
  • 25.03.2025 - செவ்வாய்க்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு திறன்கள். 

2024 - 2025ம் கல்வியாண்டிற்கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

  • 05.03.2025 - புதன்கிழமை - தமிழ் மற்றும் இதர மொழிப்படாங்கள்
  • 10.03.2025 - திங்கள்கிழமை - ஆங்கிலம்
  • 13.03.2025 - வியாழக்கிழமை - கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழில்முறை), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
  • 17.03.2025 - திங்கள்கிழமை  - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்
  • 20.03.2025 - வியாழக்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்
  • 24.03.2025 - திங்கள்கிழமை - கணிதம், விலங்கியல், வர்த்தகம், மைக்ரோ உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல்ஸ் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது)
  • 27.03.2025 - வியாழக்கிழமை - வேதியியல், கணக்கு, புவியியல். 

2024 - 2025ம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை 

  • 28 - 03 - 2025 - வெள்ளிக்கிழமை - தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்கள் 
  • 02 - 04 - 2025 - புதன்கிழமை - ஆங்கிலம் 
  • 04 - 04 - 2025 - வெள்ளிக்கிழமை - விருப்ப மொழிப் பாடம் 
  • 07 - 04 - 2025 - திங்கள்கிழமை - கணிதம் 
  • 11 - 04 - 2024 - வெள்ளிக்கிழமை - அறிவியல் 
  • 15 - 04 - 2025 - வியாழக்கிழமை - சமூக அறிவியல்.