தருமபுரி மாவட்ட காலநிலை மாற்றத்துறையில் வேலை வாய்ப்பு

தருமபுரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்க அலகில் தொழில்நுட்ப/கள அலுவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 


தொழில்நுட்ப/கள அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கவும், தட்டச்சும் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

மாவட்ட காலநிலை அலுவலர் மற்றும் மாவட்ட வன அலுவலர், மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம், தருமபுரி வனக் கோட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம், தருமபுரி - 636705

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.10.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள https://dharmapuri.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.