வேலூர் சி.எம்.சி சார்பில் சித்தூரில் மேலும் ஒரு மருத்துவக் கல்லூரி: ரூ 500 கோடி வழங்கும் பிரபல நிறுவனம்
வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியை தொடர்ந்து அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை இணைந்து சித்தூரில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க உள்ளனர். இதற்காக அறக்கட்டளை ரூ.500 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது.
மேலும், தற்போதுள்ள 120 படுக்கைகள் கொண்ட சி.எம்.பி மருத்துவமனையை 422 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளனர்.
வேலூர் சிஎம்சி இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் கூறுகையில், புதிதாக அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி, மகப்பேறு பிரிவு, ஆராய்ச்சி மற்றும் அவுட்ரீச் ஆகியவைகள் இடம்பெறும் என்று கூறினார்.
அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி அனுராக் பெஹர் கூறுகையில், சிஎம்சி வேலூரில் ஒரு நிறுவனத்தை அமைப்பது ஒரு பாக்கியம் என்று கூறினார், இது உயர்தர கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான ஆழ்ந்த சமூக அர்ப்பணிப்பு கொண்ட ஒரு முன்மாதிரி நிறுவனமாகும் என்றார்.
வேலூர் சிஎம்சி முதல்வர் சாலமன் சதீஷ்குமார் கூறியதாவது, சித்தூர் வளாகம், ஐந்து ஆண்டுகளுக்கு முன், சுகாதார அறிவியல் படிப்புகள் மற்றும் செவிலியர் கல்லூரியுடன் துவங்கியது. இப்போது மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று கூறினார்.