சென்னை ஐ.ஐ.டி யில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.


Junior Engineer

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி :

B.E./B. Tech in Mechanical / Materials Science (or) M. Sc in Physics/ Chemistry/ Materials Science (or) Diploma Mechanical/ Electrical/ Instrumentation படித்திருக்க வேண்டும். மேலும் 1-3 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம் : ரூ 25,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.10.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள  https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.