10ம் வகுப்புத் தேர்ச்சியா? தேர்வு எதுவும் கிடையாது. நேரடியான பணி நியமன வாய்ப்பு

பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், கார்பென்டர், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 3081 தொழில் பழகுநர் (Apprenctice) பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை வடக்கு ரயில்வே வாரியம் (Northern Railway) வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள் - 3093

கல்விக்கான தகுதி :- 50% மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய Trade ல் ( ITI ) ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நியமனத்தில் ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் தகுதியான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சலுகையினை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதுக்கான தகுதி :-  விண்ணப்பிக்க விரும்புவோர் 11/01/2024 அன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும் 24 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும். 

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல்

கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட

வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை

சலுகை பெறலாம்.


விண்ணப்பக் கட்டணம்:-  இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும்.

பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மகளிர் ஆகிய பிரிவினருக்கு

விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விளக்கு அளிக்கப் படுகிறது.

தெரிவு செய்யப்படும் முறை:-  10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல்

தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது. எனவே, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது

விண்ணப்பபதாரர் கல்வி தொடர்பான அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் .

பயிற்சி காலம்:-   ஓராண்டு 

அரசு அறிவித்த நெறிமுறைகளின் படி, பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊதியம் அளிக்கப்படும் .

விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான முகவரி https://rrcnr.org/ விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய

கடைசி நாள் 11/01/2024 ஆகும். விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டயாமாகும். ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய  இந்த

இணைப்பைக் கிளிக் செய்யவும் . Click Here

ஏன் அப்ரண்டிஸ் பணிகள் முக்கியத்துவம் பெறுகிறது?

  இந்திய ரயில்வே குறிப்பிட்ட பிரிவுகளில் பழகுனர் சட்டத்துக்கு உட்பட்டு 1963 ஆகஸ்ட் முதல் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து

வருகிறது. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் எந்தவித போட்டி அல்லது தேர்வு இன்றி பழகுனர்களாக எடுத்துக்

கொள்ளப்படுகின்றனர் .  இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு ரயில்வே பயிற்சி மட்டுமே அளித்து வந்த போதிலும், ஆட்சேர்ப்பு நடைபெறும்

முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் ( Level - 1 recruitment notification முந்தைய Gr. 'D' category posts (Grade Pay - Rs.1800/-))

20 சதவீத இடங்களை அப்ரெண்டிஸ்களுக்காக இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்துவருகிறது. எனவே, பயிற்சியை முடித்தவர்கள் நிரந்தர பணிகளில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.