நபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு; 108 பணியிடங்கள் அறிவிப்பு .

நபார்டு வங்கியில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 108 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 


Office Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை: 108

கல்வித் தகுதி : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

விண்ணப்பதாரர் 01.10.2024 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது வரம்பில் சலுகை உண்டு.

சம்பளம் : ரூ. 35,000

தேர்வு முறை : 

இதில் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://www.nabard.org/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.10.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள  https://www.nabard.org/ என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.