புதுச்சேரியில் அரசு வேலை வாய்ப்பு
புதுச்சேரி மாநில அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 256 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 256
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 24.04.2024 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். புதுச்சேரி அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : நிலை - 6
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://recruitment.py.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://recruitment.py.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.