திருநெல்வேலி நகராட்சி நிர்வாகத் துறையில் வேலை வாய்ப்பு
திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலகத்தில் சமுதாய அமைப்பாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

சமுதாய அமைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 35 வயது உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tirunelveli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.10.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tirunelveli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.