அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவுசார் சொத்து ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 


Intellectual Property (IP) Analyst

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

Bachelors degree in Engineering or Masters Degree in Science படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

The Director, Centre for Intellectual Property Rights (CIPR), CPDE building, Anna University, Chennai 600 025 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.