கரூர் மாவட்ட காலநிலை மாற்றத்துறையில் வேலை வாய்ப்பு
கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

தொழில்நுட்ப உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கவும், தட்டச்சும் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
மாவட்ட வன அலுவலகம், கரூர் வனக்கோட்டம், கதவு எண்: 44, பூங்கா நகர் பிரதான சாலை, தான்தோன்றிமலை, கரூர் - 639005
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.09.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://karur.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.