தமிழகத்தில் 4 மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலை வாய்ப்பு

தமிழகத்தில் தஞ்சாவூர், கடலூர், தேனி, ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 33 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது . 


Chief Legal Aid Defense Counsel

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

குற்றவியல் வழக்கறிஞராக 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 70,000

Deputy Chief Legal Aid Defense Counsel 

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி :

குற்றவியல் வழக்கறிஞராக 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

சம்பளம் :

ரூ.40,000 – 60,000

Assistant Legal Aid Defense Counsel 

காலியிடங்களின் எண்ணிக்கை : 13

கல்வித் தகுதி :

குற்றவியல் வழக்கறிஞராக 1-3 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

சம்பளம் :

ரூ. 20,000 – 35,000

Office Assistant / Clerk 

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி :

இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,000 – 20,000

Office Peon (Attendant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 10,000 – 12,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட இணையதளப் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட சம்பந்தப்பட்ட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.09.2024