சென்னை புழல் சிறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ! தகுதி 8 ஆம் வகுப்பு

தமிழகத்தின் சென்னை மாவட்டம் புழல், மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், லாரி ஓட்டுனர் மற்றும் நெசவு போதகர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.


சமையலர் (Cook)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையல் பணிகளில் 2 வருட அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி :

01.07.2024 அன்று 18 வயது முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 58,500

லாரி ஓட்டுனர் (Lorry Driver)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 19,500 – 71,900

நெசவு போதகர் (Weaving Instructor)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

கைத்தறி நெசவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 19,500 – 71,900

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை :

 இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://chennai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை -1, புழல், சென்னை - 66

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள  https://chennai.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.