எஸ்.பி.ஐ Vs ஹெச்.டி.எப்.சி Vs ஐ.சி.ஐ.சி.ஐ Vs ஆக்சிஸ் பேங்க், 1 முதல் 3 வருட எஃப்.டி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்குவது யார்?
இந்தியாவில் ஃபிக்ஸட் டெபாசிட் என்பது எப்போதும் ஒரு நீண்ட கால பொருளாதார பாதுகாப்பு திட்டமாகும். ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வங்கிகள், வங்கிகள் அல்லாத தனியார் நிதி நிறுவனங்களில் சேமித்து வைப்பதே இதன் பங்கு ஆகும். இதை எவ்வளவு காலம் முதலீடு செய்ய வேண்டும் என்பதை பயனர் தீர்மானிக்கலாம். இதனைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

சுமார் 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். முதலீடு செய்யும் காலத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடும். இந்நிலையில், இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு வழங்கும் வட்டி விகிதங்கள் சதவீதத்தில் (%) குறிப்பிடப்பட்டுள்ளன.
| வங்கி பெயர் | 1 வருடம் | 1-2 வருடம் | 2-3 வருடம் |
| மகாராஷ்டிரா வங்கி | 6 | 7.15 | 7.25 |
| பேங்க் ஆஃப் பரோடா | 7.15 | 7.3 | 7.15 |
| பேங்க் ஆஃப் இந்தியா | 6 | 7.25 | 6.75 |
| கனரா வங்கி | 6.25 | 7.25 | 6.85 |
| இந்தியன் வங்கி | 7.05 | 7.25 | 6.7 |
| யூனியன் வங்கி | 7.4 | 7.25 | 6.7 |
| ஆக்சிஸ் வங்கி | 6 | 7.2 | 7.1 |
| ஹெச்.டி.எப்.சி வங்கி | 6 | 7.25 | 7.35 |
| எஸ்.பி.ஐ | 6.5 | 7.25 | 7 |
| ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி | 6 | 7.25 | 7 |