இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு : 10 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ..

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலுடன் இணைந்த கருப்பண்ணப்பிள்ளை கட்டளையில் எழுத்தர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 

எழுத்தர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,700 – 33,700

வயதுத் தகுதி :

01.07.2024 அன்று 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

 இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  https://hrce.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி :

உதவி ஆணையர்/ செயல் அலுவலர், கருப்பண்ணப்பிள்ளை கட்டளை இணைப்பு அருள்மிகு ஜம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம், திருச்சி - 620005

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள https://hrce.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.