மதுரை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு ;
மதுரை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள நுண் கதிர்வீச்சாளர் மற்றும் மருத்துவமனைப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Radiographer
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி :
B.Sc (Radiography) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : 10,000
Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பதாரர் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,500
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://madurai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை - 625014
விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.09.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் பற்றி அறிய https://madurai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.