விருதுநகர் நகராட்சி நிர்வாகத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ..
விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலகத்தில் சமுதாய அமைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சமுதாய அமைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 14,000 - 16,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://virudhunagar.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் நகர வாழ்வாதார மையங்கள் மற்றும் கற்றல் மைய அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.09.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://virudhunagar.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.