மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 


Deputy Chief Legal Aid Defense Counsel 

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

குற்றவியல் வழக்கறிஞராக 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 50,000

Assistant Legal Aid Defense Counsel 

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் குற்றவியல் வழக்கறிஞராக 1-3 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 30,000 

Office Assistant / Clerk 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 20,000

Office Peon (Attendant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tiruvannamalai.dcourts.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

Chairman/ Principal District Judge, District Legal Services Authority, ADR Building, Tiruvannamalai - 606604

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் பற்றிஅறிந்து கொள்ள  https://tiruvannamalai.dcourts.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.