அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர், ஓட்டுனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 8 ஆம் வகுப்பு, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது . 


சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் ரிமோட் சென்சிங் நிறுவனத்தில் உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Professional Assistant – I

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

B.E./B.Tech in Geoinformatics / civil / Computer Science / IT படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : தினசரி ரூ. 915

Peon cum Driver

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம் : தினசரி ரூ. 623

வயதுத் தகுதி: 

35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

The Director, Institute of Remote Sensing, Anna University, Chennai-600 025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.