தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் இல்லாமல் படிக்கலாமா ?
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சலிங் தரவரிசை வெளியிடப்பட்டுள்ள நிலையில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத பிரிவுக்கு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இந்தாண்டு 1,52,920 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் 89,198 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% பிரிவுக்கு நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.மருத்துவ கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சீட் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் இல்லாமல் படிக்கலாம். இதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும்.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் 7.5% சிறப்பு கவுன்சலிங் கட் ஆஃப்
- பி.சி – 480
- பி.சி.எம் – 464
- எம்.பி.சி – 506
- எஸ்.சி – 449
- எஸ்.சி.ஏ – 469
- எஸ்.டி – 411
அரசு மருத்துவ கல்லூரிகளில் 7.5% சிறப்பு கவுன்சலிங் கட் ஆஃப்
- பி.சி – 507
- பி.சி.எம் – 501
- எம்.பி.சி – 529
- எஸ்.சி – 472
- எஸ்.சி.ஏ – 491
- எஸ்.டி – 440