படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி - வாழ்த்துகளை குவிக்கும் நெட்டிசன்கள்
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய நகரப் பகுதிகளிலும், அதையொட்டிய கிராமப் பகுதிகளிலும் படுகர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். படுகர் இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கடைபிடித்து வாழ்ந்து வருகின்றனர். இந்த சமூகத்தை சேர்ந்த பலர் கடந்த சில ஆண்டுகளாக மேற்படிப்பு முடித்து, மத்திய, மாநில அரசுகளில் முக்கியப் பதவிகளை அலங்கரித்து வருகின்றனர்.
படுகர் இன விமானி:
அதேபோல கடந்த சில வருடங்களாக இந்த சமுதாயத்தைச் சேர்ந்த பலர் கப்பல் படை, ராணுவம் உள்பட பல்வேறு துறைகளிலும் காலூன்றி வருகின்றனர். இந்நிலையில், நீலகிரியில் படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் முதல் முறையாக விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை உள்ளூர்வாசிகளும், உறவினர்களும் , நெட்டிசன்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் .