அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு !!!

தமிழகத்தில், நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் (Cordite Factory) டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான பயிற்சி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 40 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. 


மத்திய அரசு நிறுவனமான கார்டைட் ஃபேக்டரியில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Graduate (Engineering/Tech) Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை : 20

  • Chemical Engineering – 14
  • Mechanical Engineering – 5
  • Electrical & Electronics Engineering - 1

கல்வி தகுதி :

சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ.9000

Technician (Diploma) Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை : 20

  • Chemical Engineering – 14
  • Mechanical Engineering – 4
  • Civil Engineering – 1
  • Computer Engineering – 1

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ.8000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cordite.co.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

The General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris District. Tamilnadu Pin - 643 202.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.08.2024. 

மேலும் விவரங்களுக்கு https://cordite.co.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.