ஈரானிய சமூக ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு நோபல் பரிசு

ஈரானிய சமூக ஆர்வலர் நர்கீஸ் முகமதி

ஐ ஈரான் நாட்டில் பெண்களின் உரிமை, ஜனநாயகம் மற்றும் மரண தண்டனைக்கு எதிராக நீண்ட காலமாகப் போராடும் பெண் சமூக ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு, 2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஷியா முஸ்லிம் பெரும்பான்மை உள்ள ஈரானில்ஒன்பது வயதுக்கு மேல் பெண்கள்ஹிஜாப் அணிய வேண்டும் என்பது கட்டாயம்.பெண்கள் ஒழுங்காக ஹிஜாப் அணிகிறார்களா என்பதை கண்காணிக்க சிறப்பு போலீஸ் படை ஒன்று இருக்கிறது. ஈரான் மேற்கு பகுதியில் அமினி என்ற இளம் பெண் ஒழுங்காக ஹிஜாப் அணியவில்லை என்று கைது செய்யப்பட்டார்.

சொந்தக்காரர் ஒருவரை சந்திப்பதற்காக வெளியே போனபோது இந்த சம்பவம் நடந்தது. அவரைப்போலீஸ் தொடர்ந்து நடத்திய தாக்குதலால் அவர் கோமா நிலைக்கு போய் இறுதியில் இறந்து போனார். இதனைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக பெண் சுதந்திரம் என்றெல்லாம் போராட்டம் நடத்தினார்கள். ஈரானுக்கு இந்தப் போராட்டம் பெரிய சவாலாக இருந்தது. ஈரானில் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுத்த நர்கீஸ் முகமது பொறியியல் பட்டதாரி ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

பிறகு சில செய்தித்தாள்களில் பணிபுரிந்தார். பெண்கள் உரிமை பற்றி நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கிறார் நர்கீஸ் முகமதி.ஈரான் அரசை விமர்சனம் செய்தார் என்று 1996இல் முதல் முறை கைது செய்யப்பட்டார். 1999 இல் ஒரு பத்திரிக்கையாளருடன் திருமணம். 2003இல் டெகரானில் மனித உரிமைக்கான மையத்தில் வேலை.அமைதிக்கான முதல் நோபல் பரிசு பெற்ற இஸ்லாமிய பெண்மணி ஷெரின் எப்பாடியால் ஆரம்பிக்கப்பட்ட மையம் இது. நர்கிஸ் முகமதி மரண தண்டனைக்கு எதிராக குரல் தந்து வருகிறார் போராட்டம் நடத்தி இருக்கிறார் இது பற்றி இரண்டு புத்தகங்கள் கூட எழுதி இருக்கிறார் இதற்காக அவருக்கு 2015ல் அவருக்கு சிறை தண்டனை கிடைத்தது. மொத்தம் 13 முறை கைது ஐந்து முறை குற்றம் நிரூபணம் என்று தீர்ப்பு 31 ஆண்டு சிறை 154 முறை கசையடி இதுதான் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருக்கும் நர்கீஸ் முகமதின் போராட்ட வரலாறு.

இப்போதும் அவர் சிறையில் தான் இருக்கிறார். அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு தந்ததை தொடர்ந்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று உலக அளவில் ஈரானுக்கு வேண்டுகோள் வர தொடங்கி இருக்கிறது.

இந்த நோபல் பரிசு, ஈரான் நாட்டில் நர்கீஸ் ஆற்றிய ஒட்டுமொத்த பணிகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இவர் இன்னும் எந்தெந்த வகையில் சிறப்பாக பணியாற்ற முடியுமோ, அதை ஊக்குவிக்க இப்பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டியினர்  தெரிவித்துள்ளனர்.

நன்றி - விகடகவி டாட் இன்