தபால் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!
போஸ்ட் ஆபிஸ் வேலை வாய்ப்பு; 44,228 பணியிடங்கள்; தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும்.
தபால் சேவை :
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 44,228
தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை - 3,789
கல்வித் தகுதி :
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் :
தபால் அலுவலர் (BPM) – ரூ.12,000 – 29,380
உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) – ரூ.10,000 – 24,470
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
05.08.2024
விண்ணப்பக் கட்டணம் :
பொது பிரிவுக்கு ரூ. 100; SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.