தொழில் வரி உயர்வு !! கடும் கண்டனம் !!
தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தால் மட்டுமே தொழில் வரி உயர்வு நடைமுறைக்கு வரும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை மாதம் ரூ.21,000க்கும் மேல் சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு தொழில் வரி 35 % அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த வரியானது ஆண்டுக்கு இருமுறை வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதம் ரூ,21,000 முதல் ரூ.30,000 வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு வரி ரூ.135ல் இருந்து ரூ.185 ஆக அதிகரிக்கப்படும்.
மாதம் ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு வரி ரூ.315ல் இருந்து ரூ.430 ஆக அதிகரிக்கப்படும்.
மாதம் ரூ.45,000 முதல் ரூ.60,000 வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு வரி ரூ.690ல் இருந்து ரூ.930 ஆக அதிகரிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் இந்த தீர்மானம் பல்வேறு நிலைகளில் உள்ள ஊழியர்களுக்கு வரி சுமையை அதிகரிக்கும் என்பதால் பலதரப்பிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் இந்த தொழில் வரி உயர்வு இப்போதைக்கு உயராது என்றும் தமிழக அரசு அனுமதி அளித்தால் மட்டுமே உயரும் என்று சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் தொழில் வரி உயர்வை தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.