தமிழகத்தில் இயங்கி கொண்டிருக்கும் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப் படுவதற்கான காரணம் என்ன?

தமிழகத்தில் நடப்பாண்டில் 433 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இன்று (ஜூலை 22) முதல் கலந்தாய்வு தொடங்குகிறது. இன்று அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்பு பிரிவில் வரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்குகிறது.  

இன்று தொடங்கும் கலந்தாய்வு செப்.11-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தாண்டு கலந்தாய்வில் கலந்து கொள்ள 1 லட்சத்து 99,868 மாணவர்கள் தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் பொறியியல் கலந்தாய்வை உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 29 முதல் தொடங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ரத்து செய்துள்ளது. 

இதற்கு காரணமாக கூறிய அவர், கல்லூரிகளில் போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்ககளால்  9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளன.

இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் 433 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.80 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.