துணிநூல் துறையில் வேலை வாய்ப்பு - தமிழக அரசு அறிவிப்பு !!
தமிழ்நாடு அரசின் துணிநூல் துறையின் கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தில் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

ஊர்தி ஓட்டுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை:
பணியிடங்களின் எண்ணிக்கை 2
கல்வித் தகுதி:
எட்டாம் ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
01.07.2024 அன்று 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். பொதுவாக எம்.பி.சி பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி.ஏ பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
மாத சம்பளமாக ரூ. 19,500 – 71,900 தரப்படும்.
அலுவலக உதவியாளர் :
காலியிடங்களின் எண்ணிக்கை: 7
கல்வித் தகுதி:
எட்டாம் ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
01.07.2024 அன்று 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32 வயது வரையிலும், பி.சி, எம்.பி.சி, பி.சி.எம் பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாத சம்பளமாக ரூ. 15,700 – 58,100 கொடுக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்டு எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
துணிநூல் துறை, கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகம், முதல் மற்றும் இரண்டாம் தளம், 34, கதீட்ரல் தோட்ட சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600034
விண்ணப்பிக்க கடைசி தேதி :
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 29.07.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://tntextiles.tn.gov.in/ இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.