தமிழகத்தில் அறிவித்துள்ள ஐந்து புதிய கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்குமா?

தமிழகத்தில், தேசிய சுகாதாரப் பணிகள் இயக்குநரகம், மருத்துவ கவுன்சலிங்கிற்கான அட்டவணை மற்றும் தகவல் அறிக்கையை வெளியிடும் வரை, தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறையைத் தொடங்காது என்று மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழகத்தில் தற்போது பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலைத் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் புதன்கிழமை வெளியிட்டது. இந்நிலையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ  படிப்புகளுக்கான மருத்துவ கவுன்சலிங் எப்போது தொடங்கும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தைத் தொடர்பு கொள்கின்றனர்.


மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் ஜே.சங்குமணி,கூறுகையில், “இப்போது மாணவர் சேர்க்கையை துவங்க முடியாது, மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வு (NEET) செல்லுபடியாகுமா? என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. கவுன்சிலிங் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. இந்த விதிமுறைகள் இல்லாமல் எங்களால் தகுதி அல்லது சேர்க்கை அட்டவணையை வெளியிட முடியாது," என்றும் தெரிவித்ததாக என டி.ஓ.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.