அண்ணா பல்கலைக்கழகத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு !!!

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக தொழில்துறை ஒத்துழைப்பு மையத்தில் உதவியாளருடன் கூடிய ஓட்டுனர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 


Peon cum Driver :

காலியிடங்களின் எண்ணிக்கை:

1

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது . இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம் : தினசரி ரூ. 588

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்  https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்  பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

The Director, Centre for University Industry Collaboration (CUIC), Anna University, Chennai – 600 025

விண்ணப்பிக்க கடைசி தேதி :

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.07.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.