ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய ஓர் அறிய வாய்ப்பு !!!
உங்கள் ரேஷன் அட்டையில் ஏதாவது திருத்தங்கள் செய்ய வேண்டுமா?அப்படியென்றால் இது உங்களுக்கான பதிவு !!

ரேஷன் அட்டை குறைதீர்ப்பு முகாம் சென்னை மண்டல அலுவலகத்தில் ஜூலை மாதம் 13 ஆம் நாள் காலை 10 மணி முதல் 1 மணிவரை நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு, மக்களுக்கு வசதியாக ரேஷன் அட்டைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வசதியாக ஒவ்வொரு மாதமும் மண்டலம் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ரேஷன் பொருள்கள் தொடர்பான புகார்கள் மற்றும் அதிகாரிகள் குறித்தும் புகார் அளிக்கலாம்.
இம்மாதம் பயனாளிகளுக்காக குறைதீர்ப்பு முகாம் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை மண்டல உதவி ஆணையர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் குறைதீர்ப்பு முகாமில் பயனாளிகள் திருத்தங்கள் மற்றும் குறைகள் ஏதேனும் இருப்பினும் தெரிவித்துக் கொள்ளலாம். மேலும், இந்த குறைதீர்ப்பு முகாமில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் அங்கீகாரச் சான்றினையும் பெற முடியும்.