வாட்ஸ்அப்பில் விமான டிக்கெட் எளிதாக புக் செய்யலாம் ...

இண்டிக்கோ விமான நிறுவனம் வாட்ஸ்அப்பில் விமான டிக்கெட் புக் செய்யும் வசதி புதிதாக அறிமுகம் செய்துள்ளது.


இண்டிக்கோ இதற்கு 6Eskai என்ற ஏ.ஐ அன்சிஸ்டெண்ட் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் விமானம்  டிக்கெட் புக் செய்யலாம், ஸ்டேட்டஸ் செக் செய்யலாம் . மேலும், இதை உங்கள் மொழிகளில் பயன்படுத்தலாம்.


6Eskai ஏ.ஐ வசதியை தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பயன்படுத்தலாம்.


1. விமான டிக்கெட் புக் செய்ய முதலில் +91 7065145858 இந்த எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்.

2. இப்போது பல்வேறு ஆப்ஷன்கள் காட்டப்படும். அதில் புக் விமான டிக்கெட் ஆப்ஷன் இருக்கும்.

3. அடுத்து உங்கள் டிக்கெட் விவரங்கள், பயணத் தேதி குறிப்பிட வேண்டும்.

4. இதை செய்த பின் விமான பட்டியல் காண்பிக்கப்படும்.

5. இதை செலக்ட் செய்து விமானத்திற்கான கட்டணத்தை செலுத்தி புக் செய்யலாம்.