444 நாள்கள் டெபாசிட் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எஃப்.டி வட்டி பற்றி பார்க்கலாம் .
பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதலீட்டாளர்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வழங்கும் வட்டி விகிதம் குறித்தும், 444 கால டெபாசிட் வட்டி விகிதம் குறித்தும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவின் பழமையான வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வாடிக்கையாளர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களை வழங்கிவருகிறது. மேலும் இந்த டெபாசிட் திட்டங்கள் பல்வேறு விருப்பத் தேர்வுகளில் கிடைக்கின்றன.
இந்த வகையில் வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் குறித்து பார்க்கலாம். இந்த வட்டி விகிதங்கள் ரூ.2 கோடி வரையிலான டெபாசிட்களுக்கு பொருந்தும்.
டெபாசிட் காலம் வட்டி விகிதம் மூத்தக் குடிமக்கள் வட்டி :
| டெபாசிட் காலம் | வட்டி விகிதம் | மூத்தக் குடிமக்கள் |
| 7-14 நாட்கள் | 3.40 | 3.90 |
| 15-29 நாட்கள் | 3.40 | 3.90 |
| 30-45 நாட்கள் | 3.40 | 3.90 |
| 46-60 நாட்கள் | 3.90 | 4.40 |
| 61-90 நாட்கள் | 3.90 | 4.40 |
| 91-120 நாட்கள் | 4.40 | 4.90 |
| 121-179 நாட்கள் | 4.40 | 4.90 |
| 180-269 நாட்கள் | 4.90 | 5.40 |
| 270 நாட்கள் < 1 வருடம் | 4.90 | 5.40 |
| 1 வருடம் < 2 ஆண்டுகள் (444 நாட்கள் தவிர) | 5.15 | 5.65 |
| 444 நாள்கள் | 5.20 | 5.70 |
| 2 ஆண்டுகள் < 3 ஆண்டுகள் | 5.20 | 5.70 |
| 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் | 5.20 | 5.70 |
| IOB வரி சேமிப்பு வைப்பு | 5.20 | 5.70 |
குறைந்தபட்ச டெபாசிட் தொகையான ரூ.1 லட்சத்துடன் 7-14 நாட்கள் டெபாசிட் காலத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.