புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு !!!

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் கீழ் சித்த மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 


ஆயுஷ் மருத்துவ அலுவலர் (சித்தா) :

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் Bachelor of Siddha Medicine and Surgery (or) M.D. (Siddha) படித்திருக்க வேண்டும். 

சம்பளம் :

ரூ. 34,000

ஆயுஷ் மருத்துவ அலுவலர் (ஹோமியோபதி) :

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor of Homeopathy Medicine and Surgery படித்திருக்க வேண்டும். 

சம்பளம் :

ரூ. 34,000

மருந்து வழங்குநர் (ஆயுர்வேதம்) :

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Diploma in Integrated Pharmacy or Diploma in Pharmacy (Ayurvedha)  படித்திருக்க வேண்டும்.

சம்பளம் :

தினசரி சம்பளம் ரூ. 750

மருந்து வழங்குநர் (ஹோமியோபதி) :

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

Diploma in Integrated Pharmacy or Diploma in Pharmacy (Homeopathy)  படித்திருக்க வேண்டும். கணினி இயக்க நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் :

தினசரி சம்பளமாக ரூ. 750 தரப்படும் 


பல்நோக்கு பணியாளர் :

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது .

சம்பளம் :

தினசரி சம்பளம் ரூ. 300

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pudukkottai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி :

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம், புதுக்கோட்டை – 622001.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

18.07.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://pudukkottai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.