சென்னை பொறியியல் கல்லூரிகளைப் பற்றி ஒரு கண்ணோட்டம் !!!
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் செயல்முறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், சென்னைப் பகுதியில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகளின் கல்வி கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் எவ்வளவு என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

இந்த ஆண்டிற்க்கான பொறியியல் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பப் பதிவு முடிந்து ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்த சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஜூலை 10 ஆம் தேதி வெளியிட தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சென்னை மண்டலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் கட்டண விபரங்களை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
பொதுவாக அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணாப் பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ், மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏ.சி.டெக் கேம்பஸ் ஆகிய மூன்று கல்லூரிகளிலும் கட்டணம் ஒரே மாதிரியாக உள்ளது. முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்தால், ஒரு ஆண்டுக்கு ரெகுலர் கோர்ஸூக்கு – ரூ. 18400, செல்ஃப் சப்போர்ட் கோர்ஸூக்கு – ரூ. 20,400. முதல் தலைமுறை பட்டதாரி இல்லை என்றால், ஒரு ஆண்டுக்கு ரெகுலர் கோர்ஸூக்கு – ரூ. 30400, செல்ஃப் சப்போர்ட் கோர்ஸூக்கு – ரூ. 40,400. விடுதிக் கட்டணம் ரூ. 83,000 அளவில் இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து எஸ்.எஸ்.என் என அழைக்கப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி கட்டணம் ரூ. 1,40,000. விடுதி மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் தனி.
மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் விடுதி மாணவர்களுக்கு ரூ. 2,90,000, தினசரி வருகை மாணவர்களுக்கு ரூ. 2,00,000 என்ற அளவில் இருக்கும்.
ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் தினசரி வருகை மாணவர்களுக்கு ரூ. 1,50,000, விடுதி மாணவர்களுக்கு ரூ. 2,30,000, என்ற அளவில் இருக்கும்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், தினசரி வருகை மாணவர்களுக்கு ரூ. 1,80,000, விடுதி மாணவர்களுக்கு ரூ. 2,50,000, என்ற அளவில் இருக்கும்.
ஆர்.எம்.கே குழும கல்வி நிறுவனங்களில் தினசரி வருகை மாணவர்களுக்கு ரூ. 1,50,000, விடுதி மாணவர்களுக்கு ரூ. 2,50,000, என்ற அளவில் இருக்கும்.
லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி தினசரி வருகை மாணவர்களுக்கு ரூ. 1,30,000, விடுதி மாணவர்களுக்கு ரூ. 2,30,000, என்ற அளவில் இருக்கும்.
சாய்ராம் குழும கல்வி நிறுவனங்களில் தினசரி வருகை மாணவர்களுக்கு ரூ. 1,10,000, விடுதி மாணவர்களுக்கு ரூ. 2,30,000, என்ற அளவில் இருக்கும்.
சவீதா இன்ஜினியரிங் காலேஜ், தினசரி வருகை மாணவர்களுக்கு ரூ. 2,30,000, விடுதி மாணவர்களுக்கு ரூ. 2,80,000, என்ற அளவில் இருக்கும்.

ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ் தினசரி வருகை மாணவர்களுக்கு ரூ. 1,80,000, விடுதி மாணவர்களுக்கு ரூ. 2,80,000, என்ற அளவில் இருக்கும்.
செயிண்ட் ஜோசப் மற்றும் ஜேப்பியர் குழும கல்வி நிறுவனங்களில் தினசரி வருகை மாணவர்களுக்கு ரூ. 2,50,000, விடுதி மாணவர்களுக்கு ரூ. 2,85,000, என்ற அளவில் இருக்கும்.
மீனாட்சி சுந்தராஜன் இன்ஜினியரிங் காலேஜ் தினசரி வருகை மாணவர்களுக்கு ரூ. 80,000, விடுதி மாணவர்களுக்கு ரூ. 1,50,000, என்ற அளவில் இருக்கும்.
எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை இன்ஜினியரிங் காலேஜ் தினசரி வருகை மாணவர்களுக்கு ரூ. 1,70,000, விடுதி மாணவர்களுக்கு ரூ. 2,45,000, என்ற அளவில் இருக்கும்.
பனிமலர் இன்ஜினியரிங் காலேஜ், தினசரி வருகை மாணவர்களுக்கு ரூ. 1,60,000, விடுதி மாணவர்களுக்கு ரூ. 2,65,000, என்ற அளவில் இருக்கும்.
வேலம்மாள் குழும கல்வி நிறுவனங்களில் தினசரி வருகை மாணவர்களுக்கு ரூ. 1,40,000, விடுதி மாணவர்களுக்கு ரூ. 2,50,000, என்ற அளவில் இருக்கும்.
கே.சி.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி தினசரி வருகை மாணவர்களுக்கு ரூ. 1,50,000, விடுதி மாணவர்களுக்கு ரூ. 2,20,000, என்ற அளவில் இருக்கும்.
வேல் டெக் குழும கல்வி நிறுவனங்களில் தினசரி வருகை மாணவர்களுக்கு ரூ. 1,30,000, விடுதி மாணவர்களுக்கு ரூ. 2,00,000, என்ற அளவில் இருக்கும் என்றும் பொதுவான கருத்தினை வெளியிட்டுள்ளார்.