தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ...

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளி வந்துள்ளது . இதற்கான பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 


அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை :1

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்றும் தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்:

மாதச்சம்பளமாக 15,700 – 50,000 தரப்படும்.

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை :

மொத்த பணியிடங்கள் 4

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

30 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்:

15,700 – 50,000 ஆகும் 


தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.tnerc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி :

The Secretary, Tamil Nadu Electricity Regulatory Commission, 4th Floor, SIDCO Corporate Office Building, Thiru.vi.ka. Industrial Estate, Guindy, Chennai 600 032.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

விண்ணப்பிக்கவேண்டிய கடைசி நாள் 31.07.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.tnerc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.