இன்று ஒரு தகவல் !!!



பிளாட்பாரத்தில் ஒரு போர்ட்டர் கடைசி இரயில் சென்ற பிறகு, கஸ்டமர் கிடைக்காததால் வீட்டிற்கு புறப்பட்டார் அந்த நபர்  .

பிளாட்பார பெஞ்சில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி உட்கார்ந்து இருப்பதை பார்த்தார்.

அருகில் சென்று கேட்டார்: "நீங்கள் எந்த ஊருக்கு செல்லவேண்டும் என்று ?"

"நான் டெல்லிக்கு எனது மகனை பார்க்க செல்கிறேன் என்றாள்  "

"அம்மா - இனிமேல் எந்த வண்டியும் கிடையாது; கடைசி ரயிலும் கொஞ்ச நேரம் முன்பு தான் சென்றது.."

எனவே நீங்கள் இங்கேயே இருக்க கூடாது என்றார் ..

பெண்மணிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை; கவலையுடன் பார்த்தார்...

அந்த போர்ட்டர் கொஞ்சம் கரிசனத்தோடு, பெண்மணியை பயணிகளின் அறைக்கு அழைத்து சென்றார்.

அங்கே இரவை கழிக்கலாம் என்றார்.

"உங்கள் மகன் எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்?"

 எனது மகன் இரயில்வே துறையில் வேலை செய்கிறான்

"அவரது பெயரை சொல்லுங்கள்; தொடர்பு கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்..."

அவன் எனது லால்; எல்லோரும் லால் பகதூர் சாஸ்திரி (அப்போது அவர் ரயில் துறை அமைச்சர்) என்று அழைப்பார்கள்..

மொத்த ஸ்டேஷனும் புரண்டது; எல்லோரும் சேர்ந்து அவரை பத்திரமாக டெல்லிக்கு அனுப்பிவைத்தனர்...

அதை பார்த்து, அந்த பெண்ணுக்கு ஒன்றும் விளங்கவில்லை..

தன் மகனை பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி: நீ இரயில்வேயில் என்ன வேலை பார்க்கிறாய்?

அமைச்சர் சொன்னது: ஒரு சிறு, எளிய வேலை...