ரெப்கோ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!!

ரெப்கோ வங்கியில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளி வந்துள்ளது .20 காலியிடங்கள் எனவும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளனர்.


 வங்கியில் வேலை வேண்டும் என விரும்புபவர்கள் , இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்திய அரசின் பொத்துறை வங்கிகளுள் ஒன்றான ரெப்கோ வங்கி அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Office Assistant :

காலியிடங்களின் எண்ணிக்கை : 20

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

விண்ணப்பதாரர் 31.05.2024 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் :

மாத சம்பளமாக 9,500 – 10,000 தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வயது வரம்பு தளர்வு : 

மத்திய அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.


தேர்வு செய்யப்படும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு திறமையானவர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://repcobank.com/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

The General Manager (Admin), Repco Bank Ltd, P.B.No.1449, Repco Tower, No:33, North  Usman Road, T.Nagar, Chennai – 600 017.

விண்ணப்பம் அனுப்பவேண்டிய கடைசி தேதி :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.07.2024 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பக்கட்டணமாக ரூ.500. இருப்பினும் எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 250

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://repcobank.com/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.