சென்னையில் சமூக நலத் துறை வேலை வாய்ப்பு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ..
சென்னை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.06.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

வழக்குப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
கல்வி தகுதியாக Bachelor's Degree in Social Work படித்திருக்க வேண்டும். அல்லது Master’s of Social Work, Counselling Psycology or Development Management படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பிக்க விரும்பியவர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
இப்பணிகளுக்கு மாதச் சம்பளமாக ரூ. 18,000 தரப்படும்.
பாதுகாப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
அரசு அல்லது புகழ் பெற்ற நிறுவனத்தில் பணியாற்றிய முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம் :
இப்பணிகளுக்கு மாதச் சம்பளமாக ரூ. 12,000 தரப்படும்.

பன்முக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை :
காலி பணியிடங்கள் 1 மட்டுமே
கல்வித் தகுதி :
முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
சம்பளம் :
இப்பணிகளுக்கு மாத சம்பளமாக ரூ. 10,000 கொடுக்கப்படும்
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பியவர்கள் https://chennai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
8 ஆவது தளம்,
சிங்காரவேலர் மாளிகை,
இராஜாஜி சாலை,
சென்னை - 01
விண்ணப்பிக்க கடைசி தேதி :
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய தேதி 28.06.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.