12-ம் வகுப்பு தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் - திருச்சி மாவட்டத்திற்கான அரசு வேலை ...

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் உடன்கலந்த கணினி இயக்குபவர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது . இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 


ASSISTANT CUM COMPUTER OPERATOR

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 11,916

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு,

N.E 1, முதல் தளம்,

மெக்டொனால்டு ரோடு,

கலையரங்கம் வளாகம்,

திருச்சிராப்பள்ளி - 620001

விண்ணப்பிக்க கடைசி தேதி :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 06.07.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.