அக்னிபாத் திட்டத்தில் அரசு வேலை ...
இந்திய ராணுவத்தின் முப்படை எனப்படும் விமானப்படை, தரைப்படை, கப்பல் படை ஆகியவற்றில் பணியாற்ற ஆண்டுதோறும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின் முப்படைகளில் பணியாற்றுவர்.

மாத ஊதியம்:
ரூ.30,000-40,000 வரை ஊதியம் வழங்கப்படும் இந்த பணியில் இத்திட்டம் மூலம், 17வயது முதல் 21 வயது வரையிலான 45 ஆயிரம் இளைஞர்கள், 4 ஆண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள்.மேலும் மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :
இந்த ஆண்டுக்கான அக்னிவீர் வாயு திட்டத்தின்கீழ், இந்திய விமானப் படையில் பணிபுரிய விரும்புவோர் ஆன்லைனில் ஜூலை 8ஆம் தேதி முதல் ஜீலை 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004 முதல் 2007க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பிறந்த, திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி :
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் 12ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில பாடத்தில் 50 மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.இயற்பியல், உயிரியல், வேதியியல்மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இரண்டு ஆண்டுகள் தொழிற் கல்வி படிப்பை முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்பக் கட்டணமாக 550 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி செலுத்தவேண்டும் எனவும் ஆன்லைன் தேர்வுகள் வரும் அக்டோபர் 18ஆம் தேதி முதல் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கும் விண்ணப்பிப்பதற்கும் இந்த இணையதள முகவரியைப் பயன்படுத்தலாம்.
https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_02-2025.pdf