கட்டி முடிக்கும் முன்பே இடிந்து விழுந்த பாலம் ..

பிகாரில் இன்னும் திறப்பு விழா கூட காணாத ஒரு பாலம் கட்டி முடிக்கும் முன்பே இடிந்து விழுந்துள்ளது. இந்த  வீடியோ மக்களிடையே வைரலாகி  பெரும் அச்சத்தை வருவித்துள்ளது.


பிகாரின் அராரியா மாவட்டத்தில் பக்ரா என்ற நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் தரமற்ற பொருட்களால் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது.

சுமார் ரூ.12 கோடி மதிப்பீட்டில் , ஷிக்தி-குர்சகட்டா ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் பிற்பகலில் பாலம் உடைந்து விழுந்து ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது.

2021 ஆம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு பகுதிகளில் பிகாரில் பாலங்கள் திறப்பு விழா காணும் முன்பே உடைந்து ஆற்றில் விழும் சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .