அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி !!!

தற்போது வெளிவந்துள்ள முக்கிய செய்தி ; 2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது.


இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 1.1.2024 முதல் 9 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை நடைமுறையில் உள்ள, பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பானது அகவிலைப்படி உயர்வு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கிடையாது என்பதும், 2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.