குர்பானி கொடுக்கும் வழிமுறைகள் என்னென்ன என்று சற்று காணலாம் ..
இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பக்ரித் பண்டிகைக்கு ஆடு, மாடு, ஒட்டகம் என இஸ்லாமியர்கள் அவர் அவர்கள் வசதிக்கேற்ப பலியிட்டு பக்ரித்தை கொண்டாடுவார்கள். இந்த குர்பானி வழிமுறைகள் பற்றியும் அவற்றை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என்பதை பற்றியும் விளக்குகிறார் ஹஜ்ரத் நிஜாமுதீன்.

குர்பானி முறையை பற்றி அவர் கூறியதாவது, இப்ராஹீம் ஒரு நாள் தூங்கி கொண்டிருக்கும் பொழுது அவர் கனவில் தவமிருந்து பெற்றெடுத்த மகன் இஸ்மாயிலை பலியிடுவது போல் கனவு வந்திருக்கிறது. உடனே எழுந்து இது அந்த சைத்தான் வேலை என்று தூங்கி விட்டார். மறுபடியும் மறுநாள் அதே போல் கனவு வர உடனே எழுந்து இது சைத்தான் வேலை இல்லை இது அல்லாஹ்வின் கட்டளை என்று தன் மகனை பலியிட சென்றிருக்கிறார். அப்போது தலையை வெட்டும் போது தன் மகன் இஸ்மாயிலின் மகன் தலை வெட்டுபடவில்லை. மறுபடி முயற்சி செய்து பார்த்தும் வெட்டுபடவில்லை . இதனால் கோபமுற்ற இப்ராஹீம் கத்தியை மரத்தின் மேல் வீசினார் மரம் இரண்டாக பிளவுப்பட்டது .

சற்றும் எதிர்பாராத நிலையில் மேலிருந்து ஒரு குரல் வந்தது. அல்லாஹ் இப்ராஹீம் இடம் கூறினதாவது, உன்னை நான் சோதித்து பார்க்கவே இவ்வாறு செய்தேன் என்றார். உன்னுடைய மகன் இஸ்மாயிலுக்கு பதிலாக இரண்டு ஆடுகளை பலியிடு என்றார் . இதன் நோக்கமாகவே பக்ரரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் பக்ரீத்துகாக வாங்கும் ஆடுகள் நோய்கள் இல்லாமல் இருக்க வேண்டும், நன்கு கொளுத்த ஆடுகளாக இருக்க வேண்டும், ஆடுகள் மேல் காயங்கள் எதுவும் இருக்க கூடாது, இரண்டு ஆண்டுகள் பூர்த்தி ஆன ஆடுகளாக இருக்க வேண்டும் , பற்கள் நன்றாக உள்ள ஆடுகளாக இருக்க வேண்டும் என்றும் ஹஜ்ரத் கூறினார்.
மேலும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு பின்னர், அதன் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்து விட்டு, மூன்றாவது பங்கை, தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக இஸ்லாமியராக இருப்பரே குர்பானி ஆடுகளை வெட்ட வேண்டும் என்றும் கூறினார் .