மீன்பிடி தடைக்காலம் முடிந்து புது யாகம் செய்து கடலுக்குள் சென்ற மீனவர்கள்...
புதுச்சேரியில் வங்கக் கடலில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். தடைக்காலம் முடிந்து, புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து புறப்படும் முன்பாக மீன்வளம் பெருக வேண்டும் மக்கள் வளமோடு வாழ வேண்டும் மீனவர்களின் நலம் வாழ்வாதாரம் பெருக வேண்டும் என சிறப்பு யாகம் வளர்த்து பின்னர் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்..

இதில் திரளான விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணி அளவில் சூடம் ஏற்றி, பூஜை செய்து கடல் மாதாவை வணங்கி புதுச்சேரி அனைத்து பகுதிகளைச் சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
வருடந்தோறும் ஆழ்கடல் பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 61நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலம் என வரையறுக்கப்பட்டு விசைப்படகுகள் மீன்பிடி தடை காலம் அமுலில் இருந்தது. தடைகாலம்(நேற்று முன்தினம்) இரவோடு முடிவடைந்தது. இந்நிலையில் புதுச்சேரி துறைமுகத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள்மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.
கடந்த இரண்டு மாதமாக வெறிச்சோடிகாணப்பட்டமீன்பிடி துறைமுகம் மீனவர்கள் நேற்று மீண்டும் மீன்பிடிக்க சென்றதால் களைகட்டியுள்ளது. விசைப்படகுகள்புறப்படுவதற்கு முன்னதாககடல் அன்னைக்கும், படகுகளுக்கும் யாகம் செய்யப்பட்ட புனிதநீர் தெளித்து சிறப்பு பிரார்த்தனைகள் செய்து அனுப்பி வைத்தனர். இரண்டு மாத காலத்துக்கு பின்னர் மீன்பிடிக்கச் செல்வதால் அதிகளவு மீன்கள் கிடைக்கும் எனமீனவர்கள்நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.