முக்கிய அறிவிப்பு !! பள்ளிகளிலே ஆதார் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் ..
பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு\" திட்டத்தின் கீழ் மாணாக்கர்கள் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம் .

குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது . குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யாமல் இருந்தாலோ, பதிவு செய்த ஆதாரில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றாலும் ஆதார் மையங்களை நாடிச் செல்ல வேண்டிய தேவை இருந்தது . ஆனால் பள்ளி குழந்தைகள் எளிதாக தங்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் திருத்தத்தை மேற்கொள்ளும் வகையில் “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
தற்போது பள்ளி மாணவ, மாணவிகள் ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்க நிரந்தர ஆதார் மையத்திற்கு பயணிக்க வேண்டிய நிலையினை தவிர்த்து தாம் பயிலும் பள்ளியிலேயே ELCOT-ன் அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் ஆதார் எண் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலை மேற்கொண்டு பயன்பெற “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகத்தில் அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளில் புதிதாக ஆதார் எடுக்கவும் மற்றும் புதுப்பிக்கும் தேவை உள்ள LDIT OOOT OU, மாணவிகளுக்கு புதுப்பித்தல் பணியை மேற்கொள்ளவும் தமிழகத்தில் வட்டாரம் வாரியாக அட்டவணை தயார் செய்யப்பட்டு சிறப்பு முகாம்கள் பள்ளிகளிலேயே நடத்தப்பட உள்ளது.
இதனைத்தொடர்ந்து, தேவையுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்த முகாம் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இம்முகாமினைப் பயன்படுத்திக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆதாரில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் மற்றும் புதிய ஆதார் எண்களைப் பெற்றுத்தரவும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளியில் ஆதார் திருத்தம் முகாம் பற்றிய தகவலை தலைமை ஆசிரியரிடம் கேட்டுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது .