மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் முதல்வர் வேலை...

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்புக் கல்லூரிகளாக 100க்கும் மேற்பட்ட கல்லூரிகள் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.


மற்றும் பல்கலைக்கழகத்தின் நேரடி கண்காணிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி, பணகுடி, திசையன்விளை, தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் நாகம்பட்டி ஆகிய 6 பகுதிகளில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

பணியிடங்கள் ;

தற்போது  பணகுடி, திசையன்விளை, புளியங்குடி, தென்காசி ஆகிய நான்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் முதல்வர்கள் உள்ளனர். ஆனால் கோவிந்தபேரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியிலும், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் முதல்வர்கள் பணியிடம் காலியாக உள்ளன.

நேர்முக தேர்வு நடைபெறும் நாள் ;

அந்த பணியிடங்களுக்குப் பொறுப்பு முதல்வரை நியமிக்க மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. எனவே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவிந்தபேரி, நாகம்பட்டிஆகிய இடங்களில் இயங்கிவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் தற்காலிக முதல்வர் பணிக்கான நேர்முகத்தேர்வு ஜூலை மாதம் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த நேர்முகத் தேர்வு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.


பணிக்கான தகுதி ;

இந்த பணிக்கான நேர்காணலில் கலந்துகொள்ளும் நபர் 15 ஆண்டு பணி அனுபவம், ஏதேனும் பாடப்பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மாநிலத் தகுதித்தேர்வு, தேசியத் தகுதித் தேர்வு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 62க்குள் இருக்க வேண்டும். இந்த தகுதி உள்ளவர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளத்தகுதி உள்ளவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொள்பவர்கள் செயலாக்கக் கட்டணமாக ரூ.500 பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டையும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் அலுவலகத்திற்கு 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.