வைட்டமின் பி12 எந்த உணவுகளில் அதிகம் இருக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ள இதனை படியுங்கள் .

மனிதனின் ஆரோக்கியத்திற்கு ஒன்றான பி வைட்டமின்கள் மிகவும் தேவையானவை . அதிலும் குறிப்பாக வைட்டமின் பி12 ரத்த நாளங்களல் உண்டாகும் பாதிப்பைக் குறைக்கும். ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதைத் தடுக்கும். உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க இது மிகவும் உதவுகிறது.


மீன் வகைகள் ;

மீன் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது போலவே வைட்டமின் பி 12 - ம் அதிகம்.

அதிலும் குறிப்பாக சால்மன், மத்தி, டூனா, நெத்திலி ஆகியவற்றில் வைட்டமின் பி12 அதிகம். மீன் உணவுகள் ஒரு நாளைய வைட்டமின் பி12 - தேவையை நிறைவு செய்யும்.


அசைவ உணவுகள் ;

மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியில் வைட்டமின் பி12 நிறைந்திருக்கிறது. குறிப்பாக ஈரல் சமைத்து சாப்பிட்டு வர வைட்டமின் பி12 அதிகரிக்கும்.

ரத்த நாளங்களையும் நரம்பு மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த வைட்டமின் பி12 உதவி செய்யும்.

பால் உணவுகள் ;


தயிர், மோர், பாலாடைக்கட்டி, சீஸ், பட்டர் ஆகியவற்றில் இருந்து நமக்கு போதிய அளவு புரதங்களும் கிடைக்கும். அதேபோல வைட்டமின் ப12 - ம் போதிய அளவுக்குக் கிடைக்கும்.

அதிலும் சீஸில் வைட்டமின் பி12 மிக அதிகம். அசைவம் சாப்பிட விரும்பாதவர்களுக்கும் வெஜிடேரியன்களுக்கும் சீஸ் மற்றும் பால் பொருள்கள் மிகச்சிறந்த வைட்டமின் பி12 மூலமாகும்.

முட்டைகள் ;


முட்டையின் வெள்ளைக் கருவில் புரதங்களும் மஞ்சள் கருவில் புரதம், கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து வைட்டமின் பி12 - ம் நிறைந்து இருக்கிறது.

தினமும் நம் உணவில் ஒரு முட்டையாவது எடுத்துக் கொள்ள வேண்டும் . முடிந்தால் 2 முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். காலை உணவில் எடுத்துக் கொள்வது இன்னும் சிறந்தது.

பால் பொருள்கள் மற்றும் அசைவ உணவுகள் ஆகியவற்றைத் தவிர மற்ற சில உணவுகளிலும் வைட்டமின் பி12 இருக்கிறது.

சிப்பி மீன்கள் ; 


சிப்பி மீனில் வைட்டமின் பி12 மிக மிக அதிகம். அதனால் வாரத்தில் இரண்டு நாட்களாவது இந்த சிப்பி மீனை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது


அசைவ உணவுகள் பலவற்றிலும் இயற்கையாகவே வைட்டமின் பி12 நிறைந்து இருக்கிறது. ஆனால் சைவ உணவுகளில் மிகக் குறைவு.

சிறு தானியங்கள் ;


அசைவ உணவு விரும்பாதவர்கள் சைவ உணவாகிய  முழு தானியங்கள், செரல் வகைகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட வெஜிடேரியன் உணவகளிலும் வைட்டமின் பி12 செறிவூட்டப்பட்டு கிடைக்கிறது. சரியாக லேபிள்களை செக் செய்து பார்த்து வாங்கிப் பயன்படுத்தலாம்.

 .