இந்திய ராணுவ வீரர்களின் சம்பளம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நாம் தெரிந்திருக்க வேண்டியவைகளில் ஓன்று இந்திய ராணுவத்தின் சம்பளம். இந்திய ராணுவத்தில் பல்வேறு நிலைகள் இருந்தாலும், அவர்களின் பதவி மற்றும் சம்பளம் குறித்து நிறைய பேருக்கு குழப்பங்கள் இருக்கலாம். இந்நிலையில், யாருக்கு என்ன பொறுப்பு, அவர்களுக்கு என்ன சம்பளம் என்பதை பார்க்கலாம்.

ராணுவத்தில் என்னென்ன பதவிகள் இருக்கிறது ?
இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பதவியை பெறும் ஒருவர், 2 ஆண்டுகள் சேவையை முடித்தபின் கேப்டன் பதவி உயர்வு பெறுவார். கேப்டன் பதவியில் 2 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, மேஜர் பதவிக்கு உயர்த்தப்படுவார். 6 ஆண்டுகள் மேஜர் பதவியை வகித்தபின், லெப்டினன்ட் கர்னலாக பதவி உயர்வு பெறுவார். 13 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பவர், கர்னல் பதவியை பெறுகிறார்.
அதாவது, மொத்தமாக 26 ஆண்டுகள் சேவையாற்றிய பிறகுதான் ஒருவர் கர்னல் பதவியை அடைய முடியும். கர்னல் பின்னர், பிரிகேடியர் பதவியை அடைவார். ஆனால், பிரிகேடியர் பதவிக்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. இருப்பினும் அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்த ஒருவர் மட்டுமே பிரிகேடியர் பதவிக்கு உயர முடியும். அதன்பிறகு மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் போன்ற பதவிகள் இருக்கின்றன.

இந்திய ராணுவத்தில் சம்பளம் எவ்வளவு?
இந்திய ராணுவத்தில் மாதம் ஒருமுறை லெப்டினன்ட் பதவிக்கு அடிப்படை சம்பளம் ரூ.21,700 உடன் மொத்த சம்பளம் ரூ.57,138 ஆகும். கேப்டன் பதவியில் இருப்பவருக்கு ரூ.61,300 - ரூ.1,93,900 வரை கிடைக்கும். மேஜர் நிலையில் இருக்கும் வீரருக்கு ரூ.69,400 - ரூ.2,07,200 வரையும், லெப்டினன்ட் கர்னலுக்கு ரூ.1,21,200 - ரூ.2,12,400 வரையும் ஊதியம் வழங்கப்படுகிறது. அவருக்கு மேல் பதவி வகிக்கும் கர்னல் ரூ.1,30,600 - ரூ.2,15,900 வரையும், மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவியான பிரிகேடியருக்கு மாத ஊதியம் ரூ.1,39,600 - ரூ.2,18,200 வரையும் வழங்கப்படுகிறது.
மேலும் மேஜர் ஜெனரலுக்கு மாதந்தோறும் ரூ.1,44,200 - ரூ.2,18,200 வரை ஊதியம் வழங்கப்படுவதோடு, லெப்டினன்ட் ஜெனரலுக்கு ரூ.1,82,200 - ரூ.2,24,100 என்ற வகையில் ஊதியம் கொடுக்கப்படுகிறது. லெப்டினன்ட் ஜெனரல் பதவியிலும் சில படிநிலைகள் இருப்பதால், இந்த பதவிக்கு பல்வேறு சலுகைகள் தவிர ரூ.2,50,000 ஊதியம் வழங்கப்படுகிறது.