தேர்வு இல்லாமலே மத்திய அரசு வேலை !!! விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசு ஒரு நல்ல அறிவிப்பை அறிவித்துள்ளது .வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு ஒரு இன்ப செய்தி வந்துள்ளது. அதாவது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), எழுத்துத் தேர்வு இல்லாமல் காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள் :
DRDO வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் உள்ளன.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 19 கடைசி நாளாகும்.
பணிக்கான கல்வி தகுதி :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து கணினி அல்லது கணினி பொறியியல் உடன் பட்டதாரி முதுகலையில் முதல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வெண்டும்.

வயது வரம்பு :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு 28 வயதுக்கும் குறைவாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வும் விதிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.37,000 சம்பளம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.